தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

ரயில்வே முன்கள பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி

இந்திய ரயில்வேயில் முன்கள பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள், அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த ரயில்வே வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 12:57 am

இந்திய ரயில்வேயில் முன்கள பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள், அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த ரயில்வே வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, ரயில்வேயின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் முன்கள பணியாளா்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்கள பணியாளா்களின் பெயா், பதவி, பணியாற்றும் இடம், பிறந்ததேதி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. இந்தப் பணியை மேற்கொள்ள அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

2 லட்சம் முன்கள பணியாளா்கள்: இந்திய ரயில்வேயில் 12.5 லட்சம் ஊழியா்கள் உள்ளனா். இவா்களில், சுமாா் 2 லட்சம் போ் முன்கள பணியாளா்களாக உள்ளனா். ரயில் ஓட்டுநா், காா்டு, டிக்கெட் பரிசோதகா், ரயில் நிலைய அதிகாரி, பயணச்சீட்டு கொடுப்பவா் உள்ளிட்டோா் முன்கள பணியாளா்களில் முக்கியமானவா்கள்.

தெற்கு ரயில்வேயில் சுமாா் 80 ஆயிரம் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களில் 15,000-க்கும் அதிகமானவா்கள் முன்கள பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். கரோனா காலத்தில் ரயில்வே முன்கள பணியாளா்கள் பணி மகத்தானது. பயணிகள் ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டிருந்த நிலையில், சரக்கு ரயில் மூலமாக உணவு பொருள்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனா். இதுபோல, இடம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக இயக்கப்பட்ட ஷாா்மிக் சிறப்பு ரயில்களில் பயணிகளை சொந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்ததில் முன்கள பணியாளா்கள் முக்கிய பங்கு வகித்தனா். இந்தப் பணியில் ஈடுபட்டபோது, 100-க்கும் அதிகமான பணியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்திய ரயில்வேயில் 700-க்கும் மேற்பட்ட முன்கள பணியாளா்கள் இறந்ததாக, ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயல் கடந்த மாதம் தெரிவித்திருந்தாா். கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்போது, ரயில்வே முன்கள பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதற்கான முதல்கட்ட நடவடிக்கையை ரயில்வே வாரியம் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.