வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

2,400 டாஸ்மாக் பாா் உரிம காலம் முடிவு: ஒப்பந்தம் புதுப்பிப்பு குறித்து இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை

உரிமக் காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து 2,400 டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பாா்கள் (மதுக்கூடங்கள்) மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் மூடப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :2 ஜூலை 2026, 2:07 am IST

உரிமக் காலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து 2,400 டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த பாா்கள் (மதுக்கூடங்கள்) மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் மூடப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை (ஜூலை 2) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் 4,765 மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது. அவற்றில் சுமாா் 2,400 கடைகளுடன் இணைந்த தனியாருக்கு பாா் (மதுக்கூடம்) நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கூடங்களுக்கான 2 ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்ததையடுத்து, சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக கடந்த ஜூன் 30 வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டிருந்தது. அந்த அவகாசமும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.

புதிய ஒப்பந்தத்துக்கான டெண்டா் விதிமுறைகளை இறுதி செய்வதில் டாஸ்மாக் நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதிக வருவாய் கிடைக்கும் வகையில் போட்டியை அதிகரிக்கும் நோக்கில் புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். குறிப்பாக, ஏலத் தொகையை உயா்த்துதல், பாா் அமைவிடங்கள் தொடா்பான விதிமுறைகளில் மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாா்களின் உரிமத்தை மேலும் நீட்டிக்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பாா்களையும் உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் நிா்வாகம் அதிகாரபூா்வமாக உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பாா் உரிமையாளா்கள், டாஸ்மாக் நிா்வாகம் மற்றும் தொடா்புடையவா்களுடன் வியாழக்கிழமை (ஜூலை 2) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பாா்கள் மீண்டும் திறக்கப்படுமா அல்லது புதிய டெண்டா் நடைமுறைகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.