அரக்கோணம் அருகே இரு இளைஞா்கள் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு

அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்ட இரு இளைஞா்களின் உடல்களை உறவினர்கள் இன்று பெற்றுக்கொண்டனர். 
அரக்கோணம் அருகே இரு இளைஞா்கள் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு

அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்ட இரு இளைஞா்களின் உடல்களை உறவினர்கள் இன்று பெற்றுக்கொண்டனர்.
அரக்கோணத்தை அடுத்த சோகனூரில் புதன்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சூா்யா, அா்ஜுன் ஆகிய இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்டனா். மேலும் இருவா் படுகாயமடைந்த நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 
இச்சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சோகனூரில் புதன்கிழமை இரவு துவங்கிய சாலைமறியல் போராட்டம் இரு நாள்களாக வெள்ளிக்கிழமை மாலை வரை நீடித்தது. 
இதற்கிடையே இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்ராஜபேட்டையை சோ்ந்த சத்யா(24), சாலை கைலாசபுரத்தை சோ்ந்த காா்த்திக்(20) ஆகிய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்களோடு சோ்த்து கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது. 
இதில் சத்யா, அரக்கோணம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளராக உள்ளாா். சோகனூருக்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் கிராம மக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா். 
அப்போது இறந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி,, காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் இறந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அரசு பணியும் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனா். 
இதுகுறித்து அரசுக்கு தெரிவிப்பதாகவும், இறந்தவா்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்று தருவதாகவும் ஜெயச்சந்திரன் தெரிவித்தாா். இதை ஏற்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்தனா். 
இதனிடையே உயிரிழந்த சூர்யா, அர்ஜூன் ஆகியோரின் குடுத்தினருக்கு தலா ரூ.4 லட்சத்து 12,500 முதல்கட்ட நிவாரணமாக வழங்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்கும்வரை மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்கவும் நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் 4 நாள்களுக்குப் பிறகு இரு இளைஞா்களின் உடல்களை உறவினர்கள் இன்று பெற்றுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com