அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் 2 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

சென்னையில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாள்களுக்கு மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
சென்னையில் 2 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
Updated On :20 ஏப்ரல் 2021, 9:00 am

DIN


சென்னையில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாள்களுக்கு மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினம் முன்னிட்டு 25.04.2021 (ஞாயிறு கிழமை) மற்றும் 01.05.2021 (சனிக்கிழமை) ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் ஆகிய மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வருகின்ற 25.04.2021 (ஞாயிறு கிழமை), மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் 01.05.2021 (சனிக்கிழமை) மே தினம் முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் தனியாக இயங்கும் பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.