அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,256 ஆக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 7:53 am

DIN

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,256 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 2,94,073 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 29,256 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவுக்கு 4,450 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மொத்தமாக 2,94,073 பேர் பாதிக்கப்பட்டதில் 2,60,367 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(ஏப்ரல் 21) மட்டும் 18,035 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அண்ணா நகரில் அதிகபட்சமாக 3,129 பேரும், தேனாம்பேட்டையில் 3,096 பேரும், ராயபுரத்தில் 2,583 பேரும், கோடம்பாக்கத்தில் 2,483 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.