சென்னையில் அதிகரிக்கும் கரோனா: மண்டலவாரியாக பாதிப்பு விவரம்
சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,535 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,535 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 3,09,899 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,535 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 4,567 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 3,09,899 பேரில் 2,73,797 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று(ஏப்ரல் 25) மட்டும் 20,069 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 3,398 பேரும் அண்ணா நகரில் 3,184 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மண்டலங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
திருவிக நகர் - 2,843, கோடம்பாக்கம் -2,783, ராயபுரம் -2,293, அம்பத்தூர்-2,606 தண்டையார்பேட்டை-2,151, அடையாறு-2,355 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...