கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழக மக்களுக்கு சற்று நிம்மதி தரும் தகவல்! சுகாதாரத் துறைச் செயலாளர் வெளியிட்டார்

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News image
தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் தகவலை வெளியிட்டார் சுகாதாரத் துறைச் செயலாளர்
Updated On :27 ஏப்ரல் 2021, 6:32 am

DIN


சென்னை: கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகத்தில் கரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் கரோனா பரவலின் வேகம் சற்றுக் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகம் குறைந்துள்ளது. அடுத்த சில நாள்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது. 

தமிழகத்தில் மட்டுமல்ல.. இந்தியாவிலும் இன்று கரோனா பாதிப்பு சற்றுக் குறைந்துள்ளது.. அதுபற்றி செய்தியைப் படிக்க..

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, மிகத் தீவிரமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொள்வதைக் குறைத்துக் கொள்வது, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.

Story image

முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். தேவையின்றி, பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, நாள்தோறும் பதிவான கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்னும் தீவிரமாகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினால், கரோனா பரவல் குறையும் நிலையை எட்டலாம் என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் அளவிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.