வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி
வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில கட்சியினரை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையது அல்ல. அந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போவதால் இந்த அரசுகள் முழு ஊரடங்கிற்குத் தள்ளிக்கொண்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி தற்போது மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதற்கு ஆளுநர் அவர்களே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மாவட்டங்கள் அளவில் ஊராட்சிகள் அளவில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இன்றைய சூழலில் இரும்பு தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன்களை உற்பத்தி செய்ய முடியும். தற்பொழுது முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதங்கள் விதிப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு முகக் கவசங்கள் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது ஏனென்று தெரியவில்லை. தடுப்பூசி தயாரிக்கக் கூடிய வசதிகள் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும். தடுப்பூசியை அதிகபட்சமாக ரூ.250க்கு கொடுத்தால் அனைவரும் போட்டுக் கொள்வார்கள்.

தற்பொழுது வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் மே 2ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைக்கலாம். அதற்கான நடவடிக்கைகளை அரசும் தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும். மேலும் தன்னிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் மூன்றே மாதங்களில் வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com