நிகழாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகரசின் சார்பில் அவரது நினைவு தினத்தில் அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். அதனையடுத்து சங்ககிரி மலைடியவாரத்தில் உள்ள தேர்வீதிகள் உள்ள தார் சாலைகள், மலையடிவாரத்திலிருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் கான்கீரிட் சாலை மிகவும் மோசடைந்து இரு சக்கர வானங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. ஆகஸ்ட் 3ம் தேதி அமைச்சர்கள் அந்த சாலைகளின் வழியாக தீரன் சின்னமலை நினைவுச்சின்னத்திற்கு செல்ல உள்ளனர். அதனையடுத்து இச்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக சங்ககிரி பேரூராட்சியின் சார்பில் மண் கொட்டி அதில் உள்ள கற்களை அகற்றி தண்ணீர் ஊற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இச்சாலைகளை சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் புதிதாக செப்பனிட்டும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.