தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. 

News image
தமிழகத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா
Updated On :2 ஆகஸ்ட் 2021, 1:21 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 28 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

இதனால், இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,63,544 -ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 28 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,130-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 2,068 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 25,09,029-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் 20,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 1,44,632 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.