தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேதாரண்யத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று: கண்காணிப்பு தீவிரம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அது தொடர்பான கண்காணிப்புடன் கூடிய தடுப்புப் பணிகள் இன்று (ஆக 3)  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நடைபெற்று வரும் கரோனா தொற்று பரிசோதனை முகாம்
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:08 am

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அது தொடர்பான கண்காணிப்புடன் கூடிய தடுப்புப் பணிகள் இன்று (ஆக 3)  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம், கள்ளிமேடு, தேத்தாக்குடி, கரியாப்பட்டினம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரோனா தொற்று அண்மை நாள்களாக  உறுதிப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கோடியக்கரை பகுதியில் 3 வயது சிறுவன் உள்பட 7 பேருக்கும், மருதூரில் ஒரே குடும்பத்தில் ஆறு பேருக்கும் திங்கள்கிழமை தொற்று உறுதியானது.

இதேபோல, வாய்மேடு, மருதூர் வடக்கு உள்ளிட்ட இடங்களில் 12 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவ முகாம்கள், பரிசோதனை முகாம்கள், சிசிச்சை முகாம்கள் என தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் பரிசோதனை முகாமை ஊராட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.