மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசு: முதல்வர் ஸ்டாலின்

விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக திமுக தலைமையிலான அரசு செயல்படும் என்று தமிழக  முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசு: முதல்வர் ஸ்டாலின்
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:06 am

DIN

சென்னை: விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாக திமுக தலைமையிலான அரசு செயல்படும் என்று தமிழக  முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தரமணியில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பசிப்பிணி ஒழிப்பை இலக்காக கொண்டு எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. எம்.எஸ். சுவாமிநாதனின் ஆலோசனைகளை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 

காலநிலை மாற்றம் குறித்து எம்.எஸ். சுவாமிநாதன் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ளார். காலநிலை மாற்றம் என்பது மனித இனத்துக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னை.  காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். வேளாண் துறையில் அறிவியல் தொழில்நுட்பங்களை புகுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயத்துக்கு திமுக தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.  நாட்டுக்கு உயிராகவும் உடலாகவும் உள்ள வேளாண்மை துறைக்கு திமுக தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிப்பதால்தான், தமிழகத்தில் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி தனி நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.