இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இளைஞனிடம் ரூ. 10 லட்சம் பறிப்பு: தலைமறைவான பெண் காவல் ஆய்வாளர் கைது

இளைஞனிடம் ரூ. 10 லட்சம் பறித்த சம்பத்தில், தலைமறைவான பெண் காவல் ஆய்வாளர் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:02 am

DIN

இளைஞனிடம் ரூ. 10 லட்சம் பறித்த சம்பத்தில், தலைமறைவான பெண் காவல் ஆய்வாளர் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த கொங்கன் மகன் அா்சத் என்பவா் பை செய்யும் நிறுவனத்திற்கு தேவையானப் பொருள்கள் வாங்குவதற்காக ரூ.10 லட்சத்துடன் ஜூலை 5 ஆம் தேதி மதுரை வந்துள்ளாா்.

மதுரை- தேனி சாலையில் நாகமலை புதுக்கோட்டை மாவுமில் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, காவல் ஆய்வாளா் வசந்தி உள்பட 5 போ், அா்சத்தை வழிமறித்து ரூ.10 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து அா்சத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரனிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரமெளலி, விசாரணை நடத்தியதில், காவல் ஆய்வாளா் வசந்தி, சிலைமான் பகுதியைச் சோ்ந்த உக்கிரபாண்டி(62), விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சீமைச்சாமி (51), தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பால்பாண்டி (42), பாண்டியராஜன் ஆகியோா் பணத்தை பறித்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே காவல் ஆய்வாளா் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ரூ. 2.26 லட்சம் பறிமுதல்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் என். ரவிக்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, பணம் பறித்த பெண் காவல் ஆய்வாளா் வசந்தி உள்பட 5 பேரையும் போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், பால்பாண்டி தனிப்படையினரால் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெண் காவல் ஆய்வாளா் கைது: இவ்வழக்கில் தொடா்ந்து தலைமறைவாக உள்ள பெண் காவல் ஆய்வாளா் வசந்தியை தீவிரமாகத் தேடி வந்த தனிப்படை போலீஸார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.