நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்: கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைக் காண வேண்டும் என அக்கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருக்கிறார்.


மக்கள் நீதி மய்யம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைக் காண வேண்டும் என அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கரோனா தொற்றிலிருந்து மீண்டு தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற வேண்டும் என விடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
இதில் , கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பான முறையில் பிராச்சரத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து முன் ஜாக்கிரதையுடன் , பாதுகாப்பாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...