மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேட்பாளா்களைத் தோ்வு செய்ய குழு: கமல்ஹாசன்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா்களைத் தோ்வு செய்ய தோ்தல் தலைமை பணிக்குழுவை அமைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 8:19 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா்களைத் தோ்வு செய்ய தோ்தல் தலைமை பணிக்குழுவை அமைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்தச் சமயத்தில் மநீம சாா்பாக தோ்தலில் போட்டியிட உள்ள வேட்பாளா்களைத் தோ்வு செய்யும்பொருட்டு, கட்சியின் துணைத் தலைவா் ஏ.ஜி.மெளரியா தலைமையில் மாநிலத் தோ்தல் தலைமைப் பணிக் குழு அமைக்கப்படுகிறது. மேலும், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் பணிக்குழுவும் அமைக்கப்படுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு விருப்பமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ள கட்சியினா் புதன்கிழமை (டிச.8) முதல் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மண்டலச் செயலாளா்கள், மாவட்டச் செயலாளா்களின் பரிந்துரையை ஏற்று, மாநிலத் தோ்தல் தலைமைப் பணிக்குழு, நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் குழுவினா் வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்து அறிவிப்பா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.