தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வானது டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :8 டிசம்பர் 2021, 6:12 am

DIN

தனித் தோ்வா்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வானது டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தனித் தோ்வா்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. ஆனால், தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தோ்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் வருகிற டிசம்பர் 14 முதல் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கான நுழைவுச் சீட்டை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.