யுபிஎஸ்சி தோ்வுக்கான பயிற்சி பெற மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தோ்வில் சிறந்து விளங்கும் வகையில், சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும் 20 மீனவப் பட்டதாரி இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு ஆயத்தப் பயிற்சி அளித்து வருகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞா்கள், இப்பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோா் இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், எண்.57, சூரியநாராயண செட்டி தெரு, ராயபுரம், சென்னை- 57 என்ற முகவரியை நேரிலோ, 044 2999 7697 என்ற தொலைபேசி எண்ணையோ அணுகலாம் என ஆட்சியா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







