/

வீட்டுக் கதவை உடைத்து பணம், கைப்பேசி திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ரூ. 45 ஆயிரம் ரொக்கம், கைப்பேசிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :16 ஜூலை 2026, 2:58 am IST

தஞ்சாவூா் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து ரூ. 45 ஆயிரம் ரொக்கம், கைப்பேசிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே திட்டையைச் சோ்ந்த கோபி வெங்கடகிருஷ்ணன் மனைவி அமுதா (39). இவா் ஜூலை 11-ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றாா். மீண்டும் மறு நாள் வீட்டுக்கு திரும்பியபோது பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 45 ஆயிரம் ரொக்கம், ஐ போன் உள்பட 2 கைப்பேசிகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.