இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது: ஆளுநர் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் கலைவாணா் அரங்கில் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

News image
சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்: ஆளுநர் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
Updated On :2 பிப்ரவரி 2021, 5:43 am

DIN

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் கலைவாணா் அரங்கில் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநர் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்புத் தருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார்.

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பிறகு ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார்.

நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைக்கிறார். ஆளுநா் ஆங்கிலத்தில் ஆற்றும் உரையைப் பேரவைத்தலைவா் தனபால் தமிழில் வாசிக்கிறார். அதைத் தொடா்ந்து அன்றைய தினக் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

அதன் பின், அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவா் தனபால் தலைமையில் நடைபெறும். கூட்டத்தில் அவை முன்னவரான ஓ.பன்னீா்செல்வம், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்று, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாள்கள் நடத்துவது என முடிவு செய்வா்.

நடப்புக் கூட்டம் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறலாம் எனத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் ஆளுநா் உரை மீது விவாதம் நடைபெற்று, இறுதியாக விவாதத்துக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பாா்.

பேரவைக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றுவது உள்பட பல்வேறு மக்கள் பிரச்னைகள் எழுப்பப்பட உள்ளன. மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடா்பான அறிவிப்பு பேரவைக் கூட்டத்தொடரின்போது வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.