ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்கள் ஏற்றால் மூன்றாவது  அணி: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 

இதுவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், மக்கள் ஏற்றால் மூன்றாவது  அணி அமைப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

News image
இதுவரை அதிமுகவுடன் கூட்டணி: மக்கள் ஏற்றால் 3-வது  அணி - விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்
Updated On :3 பிப்ரவரி 2021, 7:34 am

DIN

திருச்சி: இதுவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம், மக்கள் ஏற்றால் மூன்றாவது  அணி அமைப்போம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சிக்கு புதன்கிழமை வருகை தந்த விஜயபிரபாகரன் சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Story image

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தேமுதிக இதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்று ஏற்றுக்கொண்டால் தேமுதிக தலைமையில் 3-ஆவது அணி அமையும். எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்ட நிலையிலும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற வரலாறு உள்ளது. 

அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெறுவார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அனைவருக்கும் முதல் தேர்தலாக இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவருமே தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது. 

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி,  கூட்டணி குறித்தெல்லாம் கட்சித் தலைமை முடிவு செய்யும். மக்களுக்கு நல்லது செய்பவர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.