இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

10 மாவட்டங்களில் 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் 

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.

News image
10 மாவட்டங்களில் 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்
Updated On :4 பிப்ரவரி 2021, 10:51 am

DIN

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்பட 10 மாவட்டங்களில் 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (4.2.2021) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் உறைவிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அரசு வெளியிட்ட தொலைநோக்கு திட்டம் 2023-இன் குடிசைப் பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 அடுக்குமாடி குடியிருப்புகள்  கேசவப்பிள்ளை பூங்கா பகுதி-2 திட்டப் பகுதியில் 139 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1056 அடுக்குமாடி குடியிருப்புகள், வடக்கு கிரியப்பா சாலை திட்டப் பகுதியில் 11 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 அடுக்குமாடி குடியிருப்புகள், வாலஸ் தோட்டம் திட்டப் பகுதியில் 12 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள்; வேலூர் மாவட்டம், கன்னிகாபுரம் திட்டப் பகுதியில் 20 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடி குடியிருப்புகள், டோபிகானா பகுதி-2 திட்டப் பகுதியில் 5 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகள்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, பொய்கைபட்டி திட்டப் பகுதியில் 8 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகள், வண்ணாரப்பேட்டை (டோபி காலனி) திட்டப் பகுதியில் 31 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகள்; தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி, அய்யனார் கோயில் திட்டப் பகுதியில் 31 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகள்;

கோயம்புத்தூர் மாவட்டம், கல்லாமேடு திட்டப் பகுதியில் 7 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 அடுக்குமாடி குடியிருப்புகள், பிள்ளையார்புரம் திட்டப் பகுதியில் 9 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 அடுக்குமாடி குடியிருப்புகள்;

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஜெ.ஜெ. நகர் திட்டப் பகுதியில் 26 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 அடுக்குமாடி குடியிருப்புகள், அவிநாசி பேரூராட்சி, சோலை நகர் திட்டப்பகுதியில் 37 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 448 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம், எம்.ஜி.ஆர். நகர் திட்டப் பகுதியில் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள்;

தேனி மாவட்டம், உத்தமபாளையம், சிக்காச்சியம்மன் கோயில் மேடு திட்டப் பகுதியில் 46 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகள், தப்புகுண்டு திட்டப்பகுதியில் 41 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 431 அடுக்குமாடி குடியிருப்புகள்; வடவீரநாயக்கன்பட்டி திட்டப்பகுதியில் 29 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 312 அடுக்குமாடி குடியிருப்புகள்; 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில், வடசேரி மேற்கு, புளியடி திட்டப்பகுதியில் 12 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வாகைகுளம் திட்டப் பகுதியில் 21 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள், வாகைகுளம் பகுதி-2 திட்டப் பகுதியில் 20 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.