இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் அறிவிப்பு

விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

News image
விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதல்வர் அறிவிப்பு
Updated On :17 பிப்ரவரி 2021, 5:30 pm

DIN

உடுமலைப்பேட்டை: விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திமுகவினர்  பொய் பிரசாரங்களை கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். இது தவறு. தமிழகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் மூலமாக  9 லட்சம் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 5 லட்சம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. 

Story image

மேலும் ஊரடங்கு காலத்தில் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி  அனைத்து தரப்பு மக்களுக்கும் பல நல்ல திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு தற்போது 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

மேலும் உடுமலைப்பேட்டையில் ரூ.240 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. உடுமலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் தலைமை மருத்துவமனை இந்த ஆண்டு உருவாக்கப்படும். உடுமலையில் நகராட்சி உருவாகி 100 ஆண்டுகளை கடந்து உள்ளதால் ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Story image

 விவசாயிகளின் கோரிக்கையான கொப்பரை தேங்காய் விலை உயர்வு குறித்து பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும். ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை கொடுத்து காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ஆகையால்  தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் மென்மேலும் கிடைக்க அதிமுக அரசை  ஆதரிக்க வேண்டுமென தேர்தல் பரப்புரையில் பேசினார்.  

அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை அவைத் தலைவர்  ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.