திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது, அதிமுகவின் ஆட்சியை பற்றி பொய் பிரசாரம் செய்வதையே ஸ்டாலின், கனிமொழி வழக்கமாக கொண்டுள்ளனர். திமுகவிற்கு தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் முழுவதும் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தயாநிதி என்று ஒட்டுமொத்த குடும்பமும் புறப்பட்டுவிட்டது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கோர பசியில் உள்ளனர். அதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதை எதையோ பேசுகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அவர்கள் கட்சியில் எத்தனையோ முன்னோடித் தலைவர்கள் உள்ளனர். அவர்களை விட்டு விட்டு ஸ்டாலின் குடும்பத்தை நம்பியுள்ளனர்.