காஞ்சிபுரத்தில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், காட்ரம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் கழிவு தொட்டியை இன்று (14.2.2021) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காட்ரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த பாக்கியராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

16 ஐவிபி கவுன்சிலா்கள் பாஜகவில் ஐக்கியம்: எம்சிடியில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு

ஆஸ்திரேலியாவில் 3 அரிய சோழா் கால சிலைகள் மீட்புக்கு குடியரசு துணைத் தலைவா் வரவேற்பு

குருகிராம் தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நான்கு போ் என்கவுன்ட்டரில் கொலை







