இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பிப்.23-இல் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுகிறது.

News image
பிப்.23-இல் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்
Updated On :16 பிப்ரவரி 2021, 7:32 am

DIN


தமிழக சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுகிறது.

இது குறித்து பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் வரும் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகைக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

மேலும், பிப்ரவரி 23-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு 2021- 2022-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 23-ஆம் தேதி தமிழக துணை முதல்வரும் நிதியமைச்ருமான ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.