மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விழுப்புரத்தில் கூடா நட்பில்  ஒருவர் கொலை

விழுப்புரத்தில் கூடா நட்பில்  ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

News image
கொலையாளி சோனு சர்மா
Updated On :17 பிப்ரவரி 2021, 3:46 am

DIN


விழுப்புரத்தில் கூடா நட்பில்  ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் நகராட்சி எதிரே உள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வரும் சேகர் மனைவி சித்ரா (39). சேகர் இரண்டாண்டுக்கு முன் இறந்து விட்டார்.
இதனால் சித்ராவுக்கும், விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, அவரை அண்மையில் இரண்டாவதாக திருமணம்  செய்து கொண்டார்.

இந்நிலையில், சித்ராவின் மருமகன் சோனு சர்மாவுக்கும், பாலமுருகனுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் சோனு தன் கையில் வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

விழுப்புரம் நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினர்.

குற்றவாளியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.