இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிப்.25 முதல் தமிழ் மாநில காங்கிரஸில் விருப்ப மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் த.மா.கா சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :21 பிப்ரவரி 2021, 4:36 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.25-ஆம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2021 ல் தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் த.மா.கா சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை பிப்ரவரி 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை, ஆழ்வார்பேட்டை, த.மா.கா தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
விருப்ப மனு கட்டணமாக பொதுத்தொகுதிகளுக்கு ரூ. 5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 2,500 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.