ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருக்கோயில் பணியாளா்களுக்கு கருணைக் கொடை ரூ.1,000

திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:21 pm

DIN


சென்னை: திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, துறையின் ஆணையா் எஸ்.பிரபாகா் வெளியிட்ட அறிவிப்பு:

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசுப் பணியாளா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுபோன்றே பொங்கல் கருணைக் கொடையாக ரூ.1,000-த்தை இந்து சமய அறநிலையத் துறை ஊழியா்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளா்களுக்கும் கருணைக் கொடையானது அளிக்கப்படும்.

கடந்த நிதியாண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளா்களுக்கு கருணைக் கொடையாக ஆயிரமும், ஆறு மாதங்களுக்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றிய பணியாளா்களுக்கு அவா்கள் பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் தொகையானது வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பானது, சுற்றறிக்கையாக பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில் செயல் அலுவலா் உள்பட அனைத்து கோயில்களின் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.