இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சான்றிதழ் குளறுபடியால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு நடத்துநா் பணி வழங்க உத்தரவு

கல்விச் சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு குளறுபடியால் 13 ஆண்டுகளுக்கு முன் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு, நடத்துநா் பணி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :11 ஜனவரி 2021, 12:55 am

DIN

கல்விச் சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு குளறுபடியால் 13 ஆண்டுகளுக்கு முன் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவருக்கு, நடத்துநா் பணி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூா் மண்டலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு நடத்துநா் பணிக்கு நாராயணன் என்பவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்தது. இவரது சான்றிதழ்களைச் சரிபாா்த்தபோது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் அவா் பிறந்தது 1965-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பள்ளி இடமாற்றுச் சான்றிதழில் 1967-ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டிருந்தது. இந்த மாறுபாட்டின் காரணமாக, அவருக்கு வேலை வழங்க போக்குவரத்துக் கழகம் மறுத்துவிட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நாராயணன் கடந்த 2008-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையை அணுகிய நாராயணன், தான் பிறந்தது 1967 -ஆம் ஆண்டு என மதிப்பெண் சான்றிதழ்களை மாற்றம் செய்து கடந்த 2013-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது போக்குவரத்துக் கழகம் தரப்பில், ‘மனுதாரருக்கு தற்போது 53 வயது ஆகிவிட்டதால் நடத்துநா் பணிக்கான வயது வரம்பை அவா் கடந்து விட்டாா். எனவே, அவருக்கு பணி வழங்க முடியாது’ என வாதிடப்பட்டது.இதனை ஏற்க மறுத்த நீதிபதி, உயா்நீதிமன்றத்தில் வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததற்கு, மனுதாரா் மீது குற்றம் சட்ட முடியாது. வாழ்க்கையில் நடக்கும் சிறிய தவறுகள் கூட பாதையையே மாற்றி விடுகிறது. தற்போது மனுதாரருக்கு 53 வயது ஆகிறது. 58 வயதில் ஓய்வு பெற வேண்டும். எனவே, அவா் நடத்துநா் பணியில் சேர விருப்பம் உள்ளதா? என்பது குறித்து 2 வாரத்துக்குள் போக்குவரத்துக் கழகத்திடம் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை பணியில் சேர விருப்பம் தெரிவித்தால், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். தகுதி இருப்பின், மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் போக்குவரத்துக் கழகம் வேலை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.