அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

News image
Updated On :21 ஜனவரி 2021, 3:22 pm

DIN

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். 
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை மேலும் தாமதமின்றிக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
பொருளாளர் துரைமுருகன், டிஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.