மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் திருமலேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார்.


மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் திருமலேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மதுரை மாவட்டம் எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ். இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு கடந்த 3 நாள்களாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 7 வயது சிறுவன் திருமலேஷ் இன்று பலியானார். இந்த நிலையில் அவரது சகோதரர் 9 வயதான மிருத்தின் ஜெயன், டெங்கு காய்ச்சல் பாதித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாவட்டம் எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...