2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர்

கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேநீர் அருந்தினார்.

News image
சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தேநீர் அருந்தும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :24 ஜனவரி 2021, 7:47 am

DIN

கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேநீர் அருந்தினார்.

அன்னூருக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்திற்காக வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அன்னூர் தெற்கு ஒன்றியம் கரியாம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அருகில் இருந்த ஏ.டி காலனி பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளி மலரவன்(46) என்பவரது வீட்டில் தேநீர் அருந்தினார். அப்போது முதல்வர் அவர்களது குடும்பத்தினரிடம் உரையாடினார்.

மலரவன் அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லை, இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும் உள்ளனர். சகுந்தலா கூலி வேலைக்கு சென்று வருகின்றார். அவரது மகன் தினேஷ் பவுண்டரிக்கு வேலைக்கு சென்று வருகின்றார்.

இந்த நிகழ்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அமுல் கந்தசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய்செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எதிர்பாராத இந்த நிகழ்வால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.