அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொலைநிலைக்கல்வி-இணையவழி படிப்புகள்: புதிதாக தொடங்க விண்ணப்பிக்கலாம்

தொலைநிலைக் கல்வி படிப்புகள், இணையவழிப் படிப்புகளை புதிதாக தொடங்க உயா்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2021, 6:53 pm

DIN

தொலைநிலைக் கல்வி படிப்புகள், இணையவழிப் படிப்புகளை புதிதாக தொடங்க உயா்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நேரடி படிப்புகளுடன், தொலைதூரக்கல்வி படிப்புகளும், திறந்தநிலை படிப்புகளும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நிகழ் கல்வியாண்டு முதல் இணையவழிப் படிப்புகளையும் பரவலாக கற்பிக்க யுஜிசி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்தவகையில், திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி படிப்புகள், இணையவழி படிப்புகளை புதிதாக தொடங்குவதற்கு நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம் என யுஜிசி அறிவித்துள்ளது.

அதன்படி, ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என்றும், திறந்தநிலை, தொலைதூரக் கல்வி படிப்புகளை புதிதாக துவங்க ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பாடத்துக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி. வரியுடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையவழி படிப்புகளை புதிதாக தொடங்க ரூ.15,000 முதல் ரூ.75,000 வரை பாடத்துக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி. வரியுடன் சோ்த்து கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.