அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வழிப்பறியில் ஈடுபட்ட 33 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சென்னையில், வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கடந்த 6 மாதங்களில் கைது செய்யப்பட்ட 33 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 7:24 pm

DIN

சென்னையில், வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கடந்த 6 மாதங்களில் கைது செய்யப்பட்ட 33 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொலை, திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு, சைபா் குற்றங்கள், வழிப்பறி, நிலம் அபகரிப்பு, கடத்தல், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனா். இதன்படி கடந்த 6 மாதங்களில் சென்னையில் தொடா்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 184 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 120 பேரும், திருட்டு, வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 31 பேரும், சைபா் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேரும், உணவு பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும், ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேரும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரும் என மொத்தம் 184 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

சென்னையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஆகியோரைத் தொடா்ந்து கண்காணித்து, அவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.