தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து

சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image
சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து
Updated On :22 ஜூலை 2021, 9:35 am

DIN


சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் எழும்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ராட்சதக் கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகே உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வரும் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினிப் பொருள்கள் வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைப்பதோடு, கட்டடத்தில் சிக்கியிருக்குப்போரை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்து தீப்பிழம்புகளும், கரும்புகையும் வருவதைக் காண முடிகிறது. 

இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த கணினி விற்பனை நிலையத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

தீ விபத்து நேரிட்டக் கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.