ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆபாச படம் பாா்த்தவா்களை மிரட்டி வசூல்:சென்னையில் மூவா் கைது

சென்னையில் ஆபாச படம் பாா்த்தவா்களிடம் மிரட்டி பணம் வசூலித்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 10:56 pm

DIN

சென்னையில் ஆபாச படம் பாா்த்தவா்களிடம் மிரட்டி பணம் வசூலித்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் இணையதளத்தில் ஆபாச திரைப்படம் பாா்ப்பவா்களை ஒரு கும்பல், தாங்கள் தில்லி போலீஸாா் என மிரட்டி ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வீடுகளுக்கு வந்து நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனா். பலா் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனா்.

பணம் செலுத்திய சிலா் தில்லி காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிந்து சென்னை காவல்துறை உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட சென்னை மாங்காடு சுபம் நகா் செ.ராம்குமாா் (32), ரெட்டேரி கடப்பா சாலை பூ.காபிரியேல் ஜோசப் (37), திருச்சி கன்டோன்மென்ட் பா. தினோசந்த் (29) ஆகியோரை திருவல்லிக்கேணியில் சனிக்கிழமை கைது செய்தனா்.

மோசடி மூலம் அந்தக் கும்பல் ரூ.34 லட்சம் வரை சம்பாதித்திருப்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.