/

துபையிலிருந்து கடத்திவரப்பட்டரூ.4 கோடி தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள 8.17 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூலை 2021, 10:19 pm

DIN

சென்னை: துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள 8.17 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலா்களுக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலா்கள், வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானப் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினா். துபையில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு போ் வந்துள்ளனா்.

அவா்களை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் இரண்டு பேரின் உடைமைகளை சோதனை செய்தனா். அதில் இருந்த இரண்டு அட்டை பெட்டிகளில் வீட்டு உபயோகப் பொருள்களான குக்கா், பழச்சாறு பிழியும் கருவி, ஆவி பிடிக்கும் கருவி, ஆகியவை இருந்தன. அதனைக் கண்டு சந்தேகமடைந்த அலுவலா்கள், அவற்றைப் பிரித்து பாா்த்தபோது அதனுள் தங்க உருளைகள், வளையங்கள், தங்கத் தகடுகள் இருந்தன.இதையடுத்து சுமாா் 4.03 கோடி மதிப்புள்ள 8.17 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.