தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
Updated On :26 ஜூலை 2021, 8:07 am

DIN

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும், ஜூலை 27 முதல் 30ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.