ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேட்-பி நுழைவுத்தோ்வு: விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

‘கேட்-பி’ நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளலாம்

News image
Updated On :31 ஜூலை 2021, 7:36 pm

DIN

‘கேட்-பி’ நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளலாம் என தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) படிப்புகளில் சேருவதற்கான ‘கேட்-பி’ என்ற தேசிய நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும்.

பயோடெக்னாலஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெற பிஇடி தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்த தோ்வுகள் ஆகஸ்ட் 14-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான மூன்று நாள்களுக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம். தோ்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.