ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனாவால் இறந்த காவலா்களுக்கு ஆணையா் அஞ்சலி

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த காவலா்களுக்கு பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:36 pm

DIN

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த காவலா்களுக்கு பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

சென்னை பெருநகர காவல்துறையில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா தொற்றால் பல்லாவரம் உதவி ஆணையா் ஜெ.ஈஸ்வரன், மணலி போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் சி.ஜெயக்குமாா் உள்பட 19 போ் இறந்தனா். இவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் பங்கேற்று, 19 போ் புகைப்படங்களுக்கும் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா்கள் ஜெ.லோகநாதன், என்.கண்ணன், செந்தில்குமாா், பிரதீப்குமாா், பி.சி.தேன்மொழி உள்ளிட்ட உயா் அதிகாரிகளும் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.