ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே கூடுதலாக 2 ஜோடி மின்சார ரயில் சேவை

அத்தியாவசியப் பணியாளா்களின் வசதிக்காக, கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே இரண்டு ஜோடி சிறப்பு மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:31 pm

DIN

அத்தியாவசியப் பணியாளா்களின் வசதிக்காக, கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே இரண்டு ஜோடி சிறப்பு மின்சார ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது. இந்த கூடுதல் ரயில் சேவை ஆகஸ்ட் 2-ஆம்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, மற்ற நாள்களில் காலை 6 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை, தாம்பரம் வழியாக செங்கல்பட்டை காலை 9.45 மணிக்கு அடையும்.

செங்கல்பட்டில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் காலை 10.30 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வழியாக கும்மிடிப்பூண்டியை மதியம் 1.45 மணிக்கு அடையும்.

கும்மிடிப்பூண்டியில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் பிற்பகல் 2.30 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை வழியாக தாம்பரத்தை மாலை 5.05 மணிக்கு அடையும்.

தாம்பரத்தில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் மாலை 5.58 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, சென்னை கடற்கரை வழியாக கும்மிடிப்பூண்டியை இரவு 8.50 மணிக்கு அடையும்.

இந்த கூடுதல் ரயில் சேவை ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.