கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி: வீட்டின் மேற்கூரை  இடிந்து விழுந்து பெண் பலி

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். 

News image
Updated On :1 ஜூன் 2021, 5:44 am

DIN

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் கிழக்கு 7 ஆவது தெருவை சேர்ந்தவர் ராஜமுருகன். இவரது மகள் பரமேஸ்வரி (23). பொறியியல் பட்டதாரியான பரமேஸ்வரி தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை வாட்டர் கீட்டர் உற்பத்தி செய்யும் ஆலையில் தொழில்நுட்ப  பிரிவில் பணியாற்றி வந்தார்.

Story image

இந்நிலையில் பரமேஸ்வரி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி காரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Story image

அவரது தம்பி சுந்தர் பலத்தகாயமடைந்தார். அவரது தந்தை உள்பட குடும்பத்தினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.