தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா இல்லையா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.
கரோனா பரவலால் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மாநிலப் பாடத்திட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கூடுதல் திரைகளில் தாய் கிழவி... முதல் நாள் வசூல் இவ்வளவா?

தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டு முகப்பில் பெரியார் படம் அகற்றப்பட்டது!

எப்ஸ்டீன் கோப்பு, அதானி வழக்கின் இடையில் சிக்கியுள்ள பிரதமர் மோடி: ராகுல்

மன உறுதியும் விடாமுயற்சியும்... ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஜெய் ஷா புகழாரம்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

