தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை  28,186 ஆனது

சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 28,186 ஆகக் குறைந்துள்ளது. 

News image
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை  28,186 ஆனது
Updated On :4 ஜூன் 2021, 7:13 am

DIN

சென்னை: சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 28,186 ஆகக் குறைந்துள்ளது. 

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் காரணமாக, கரோனா பரவல் கடுமையாக இருந்த நிலை மாறி, வேகமாகக்  குறைந்து வருகிறது.

சென்னை மக்களுக்கு நிம்மதி தரும் செய்தியாக,  சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 38 ஆயிரமாக இருந்த நிலையில் திங்கள்கிழமை காலை 35,423 ஆகக் குறைந்தது. இது புதன்கிழமை காலை நிலவரப்படி 32 ஆயிரமாகக் குறைந்து தற்போது 28 ஆயிரமாக மாறியுள்ளது.

இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.11 லட்சமாக உள்ளது. இவர்களில் 4.75 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 7,291 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில இன்று அந்த எண்ணிக்கை 2,806 ஆகக் குறைந்தது. இதற்கடுத்த இடத்தில் கோடம்பாக்கத்தில் 2,623 பேரும், அம்பத்தூரில் 2,298 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 2 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாதத்தில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 2,000 என்ற அளவில் குறையத் தொடங்கி உள்ளது.

நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை குறைந்து வருவதை இங்கே காணலாம்.
ஜூன் 03: 2,062
ஜூன் 02: 2,217
ஜூன் 01: 2,467
மே 31: 2,596
மே 30: 2,689
மே 29: 2,705
மே 28: 2,762
மே 27: 2,779
மே 26: 3,561
மே 25: 4,041
மே 24: 4,985
மே 23: 5,169
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.