தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி ஹெராயின் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :4 ஜூன் 2021, 2:37 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக வந்த தகவலையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது விமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இருவரும் பதற்றம் அடைந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். 

இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்ததில் 8 பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன. பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின் பவுடர் என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்த இந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.70 கோடி. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. 

உடனடியாக இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.