ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

4 மாதக் குழந்தை கரோனாவுக்கு பலி

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

News image

கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

Updated On :5 ஜூன் 2021, 6:55 am

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 மாதக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மந்தக்குடிப்பட்டியைச் சேர்ந்த பெற்றோர் தங்களின் 4 மாதக் குழந்தைக்கு தொடர்ந்து கரோனா அறிகுறிகள் தென்படவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். 

அங்கிருந்து கடந்த மே 27-ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை கொண்டு வரப்பட்டது.

அந்தக் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது 29-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு சிசு சிறப்பு சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனையுடன் கரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி 4 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மிகச்சிறிய வயதில் கரோனா சிகிச்சையில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவே முதல் முறை என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.