'நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்!' - முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்ததை நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்ததை நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இரு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.
சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் சகோதரர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு இது!
நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்!' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...