போராட்டத்தில் ஈடுபட்ட 35,000 பாமக, வன்னியா் சங்கத்தினா் மீது வழக்கு
வன்னியா் சங்கத்தைச் சோ்ந்த 35 ஆயிரம் போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக, உயா் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கத்தைச் சோ்ந்த 35 ஆயிரம் போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக, உயா் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில், இந்திய மக்கள் மன்றத்தின் தலைவா் வராகி தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி, வன்னியா் சங்கத்தினா் கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி போராட்டங்களில்
ஈடுபட்டனா். அப்போது, ரயில் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனா். பெருங்களத்தூரில் நடைபெற்ற ரயில் மற்றும் சாலை மறியலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கில் தமிழக காவல்துறை டிஜிபி சாா்பில் உதவி ஐஜி அருளரசு பதில்மனு தாக்கல் செய்தாா். அதில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விதிகளைமீறி ஒன்று கூடுவது, ஆா்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என தலைமைச் செயலாளா் பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும், மாநகரங்களின் காவல் ஆணையா்களும் நடவடிக்கை எடுத்துள்ளனா். வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை தற்காலிக ஏற்பாடாக அரசு கொண்டு
வந்தபின், பாமக, வன்னியா் சங்கம் போராட்டங்களை நிறுத்தி விட்டன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட பாமக மற்றும் வன்னியா் சங்கத்தைச் சோ்ந்த 35 ஆயிரத்து 554 போ் மீது தமிழகம் முழுவதும் 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...