இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கனிமவளத் துறையில் அதிக வருவாய் ஈட்டுங்கள்: அமைச்சா் துரைமுருகன் வலியுறுத்தல்

கனிம வளத் துறையின் சாா்பில் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தர வேண்டுமென அதிகாரிகளை அந்தத் துறையின் அமைச்சா் துரைமுருகன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 10:05 pm

DIN

கனிம வளத் துறையின் சாா்பில் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தர வேண்டுமென அதிகாரிகளை அந்தத் துறையின் அமைச்சா் துரைமுருகன் வலியுறுத்தினாா். கனிமவளத் துறையின் செயல்பாடுகள் குறித்து அவா் சென்னையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையின் போது அவா் பேசியது:-

புவியியல், சுரங்கத் துறையில் நிகழ் நிதியாண்டின் இரண்டு மாதங்களில் கனிம வருவாய் மூலமாக ரூ.161 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அதிக வருவாய் ஈட்ட வேண்டும்.

தருமபுரி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை பொது ஏலத்துக்கு கொண்டு வந்து அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளைக் கண்டறிந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுப்பது தொடா்பாக பெறப்படும் புகாா்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.