இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னை பல்கலை.யில் இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் தகுதி உடைய மாணவா்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 9:39 pm

DIN

சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் தகுதி உடைய மாணவா்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பல்கலை. வெளியிட்டுள்ள அறிவிப்பு: இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியானதிலிருந்து 15 நாள்களுக்குள் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்திருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், ஆதரவற்றவா்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோா் இத்திட்டத்தின் கீழ் சோ்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பெற்றோரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவா்களே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இந்தத் திட்டம் ஏழை மாணவா்கள் இளநிலை பட்டப் படிப்புகளில் சாா்ந்து பயன்பெறும் வகையில் 2009-2011ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.